ADDED : ஜூலை 25, 2024 04:08 AM
சிக்கல்: -சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த உய்ய வந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து 30 நாட்களும் காலை, மாலை வேளைகளில் நடந்து வருகிறது. மாலையில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.