/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போலீஸ் ஸ்டேஷன் முன்பு மயங்கி விழுந்த முதியவர் பலி போலீஸ் ஸ்டேஷன் முன்பு மயங்கி விழுந்த முதியவர் பலி
போலீஸ் ஸ்டேஷன் முன்பு மயங்கி விழுந்த முதியவர் பலி
போலீஸ் ஸ்டேஷன் முன்பு மயங்கி விழுந்த முதியவர் பலி
போலீஸ் ஸ்டேஷன் முன்பு மயங்கி விழுந்த முதியவர் பலி
ADDED : ஜூன் 17, 2024 12:21 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழப்பனையடியேந்தல் கூரி 70. என்பவர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு மயங்கி விழுந்து இறந்தார்.
கீழப்பனையடியேந்தல் கூரி 70. இவரது மூத்த மகன் முத்துசாமி, இளைய மகன் கருப்பசாமி இடையே ஏற்கனவே சொத்து பிரிப்பதில் பிரச்னை உள்ளது.
இதன்காரணமாக சகோதரர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. காயமடைந்த கருப்புசாமி முதுகுளத்துார் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூரி, பேத்தி முத்துலட்சுமியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.
அப்போது ஸ்டேஷன் முன்பு கூரி மயக்கம் அடைந்து விழுந்தார். முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் கூரி இறந்துவிட்டதாக கூறினர்.
முதுகுளத்துார் எஸ்.ஐ., சக்திவேல் விசாரிக்கிறார்.