/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி
ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி
ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி
ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி
ADDED : ஜூன் 17, 2024 12:21 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் கார் கட்டுப்பாட்டினை இழந்து கவிழ்ந்ததில் துாத்துக்குடியைச் சேர்ந்த குமார் 30, பலியானார்.
தேவிபட்டினத்தில் இருந்து பட்டணம்காத்தான் ரோட்டில் காரில் துாத்துக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார் 30. இவரது நண்பர்கள் முத்துநம்பி 26, ஜெயமுருகன் 28,சக்தி 28, ஆகியோர் ராமநாதபுரத்தில் நண்பரின் திருமணத்திற்கு வந்து விட்டு மாலை 5:20 மணிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போ கார் கட்டுப்பாட்டினை இழந்து ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டி வந்த குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.