ADDED : ஜூன் 03, 2024 02:51 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி, துண்டு பிரசாரங்கள் கொடுத்து பிரசாரம் செய்தனர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள், பெற்றோர்களை சந்தித்து, துண்டு பிரசுரங்கள் கொடுத்து அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினர்.