Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கைத்தறி துணிகளுக்கு ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும்: நெசவாளர் வலியுறுத்தல்

கைத்தறி துணிகளுக்கு ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும்: நெசவாளர் வலியுறுத்தல்

கைத்தறி துணிகளுக்கு ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும்: நெசவாளர் வலியுறுத்தல்

கைத்தறி துணிகளுக்கு ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும்: நெசவாளர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 16, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரத்தில் காங்., நெசவாளர் அணி சார்பில் காமராஜர் 122 வது பிறந்த நாள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

காங்., நெசவாளர் அணி மாநில தலைவர் சுந்தரவேல் தலைமை வகித்தார்.

மாநில நிர்வாகிகள் நாகராஜன், குப்புசாமி, மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கோதண்டராமன் வரவேற்றார்.

கைத்தறி மீதான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும்.

நெசவாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1200 உள்ளதை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் ஜவுளி விற்பனைக்கு முழுமையான ரிபேட் வழங்க வேண்டும். வேலுார், குடியாத்தம் பகுதியில் தேங்கியுள்ள பாலியஸ்டர் ரக சேலைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி லுங்கி ரகங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை மாவட்ட தலைவர் சந்திரன், மாநில பொருளாளர் விமல்காந்த் முன்மொழிந்தனர்.

நெசவாளர்களுக்கு காங்., நிர்வாகிகள் ராஜாராம் பாண்டியன், ஜோதி பாலன், சரவணகாந்தி, கிருஷ்ணராஜ் விருதுகளை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us