Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வெடி பொருட்கள் கடத்தல் வழக்கில்புலி ஆதரவாளருக்கு 5 ஆண்டு சிறை

வெடி பொருட்கள் கடத்தல் வழக்கில்புலி ஆதரவாளருக்கு 5 ஆண்டு சிறை

வெடி பொருட்கள் கடத்தல் வழக்கில்புலி ஆதரவாளருக்கு 5 ஆண்டு சிறை

வெடி பொருட்கள் கடத்தல் வழக்கில்புலி ஆதரவாளருக்கு 5 ஆண்டு சிறை

ADDED : ஜூலை 18, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:கடந்த 2015ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மறு உருவாக்கம் செய்வதற்காக வெடி பொருட்களை கடத்திய வழக்கில், இலங்கையை சேர்ந்த புலிகள் ஆதரவாளர் ஸ்ரீரஞ்சன், 47, என்பவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில், 2015ல் கியூ பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் டெட்டனேட்டர் குச்சிகள், சயனைடு குப்பிகளை கடத்தி வந்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஷ்கரன், குமரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், விடுதலை புலிகள் இயக்கத்தை மறுஉருவாக்கம் செய்வதற்காக உதவி செய்ய, கடல் வழியாக இலங்கைக்கு இந்த பொருட்களை கடத்த இருந்ததாக திருச்சியில் தங்கிருந்த இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த ஸ்ரீரஞ்சன் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் ஸ்ரீரஞ்சன் தவிர மற்ற ஐந்து பேர் மீதும் 2018, 2021ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஸ்ரீரஞ்சன் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ஸ்ரீரஞ்சனுக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us