/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேனீ வளர்க்க 40 சதவீதம் அரசு மானியம் பெறலாம் கலெக்டர் தகவல் தேனீ வளர்க்க 40 சதவீதம் அரசு மானியம் பெறலாம் கலெக்டர் தகவல்
தேனீ வளர்க்க 40 சதவீதம் அரசு மானியம் பெறலாம் கலெக்டர் தகவல்
தேனீ வளர்க்க 40 சதவீதம் அரசு மானியம் பெறலாம் கலெக்டர் தகவல்
தேனீ வளர்க்க 40 சதவீதம் அரசு மானியம் பெறலாம் கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 05, 2024 04:26 AM
உச்சிபுளி: தோட்டக்கலைத் துறை சார்பில் தேனீ வளர்க்க ரூ.60ஆயிரம் வரை 40 சதவீதம் அரசு மானியத்தில் வழங்கப்படுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உச்சிப்புளியில் தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
தேனீ வளர்க்க குறைந்தது 10 சென்ட் இடம் போதுமானது. தேனீ கருவிகள், தேனீ பெட்டிகள், தேன் பிழிந்தெடுக்கும் கருவிகள் அடங்கிய தொகுப்பு ரூ.60 ஆயிரத்தில் தோட்டக்கலைத் துறையில் 40 சதவீதம் அரசு மானியத்தில் வழங்கப்படுகிறது.
படித்த இளைஞர்கள், விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.