நயினார்கோவில்; பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி 50. இவர் நேற்று மதியம் 3:15 மணிக்கு டூவீலரில் நயினார்கோவிலில் இருந்து கொளுவூர் நோக்கி சென்றார்.
அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது டிராக்டர் மீது மோதி குமாரசாமி சம்பவ இடத்தில் பலியானார். நயினார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.