ADDED : மார் 21, 2025 02:58 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில்வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா மற்றும் சுதர்சன், முத்துகிருஷ்ணன்ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் அவர்கள் ஜாமின் பெற்றனர். மார்ச் 12ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கின் விசாரணைக்காக போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் நேற்று ஆஜராகினர்.
இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. எனவே எங்கள் 3 பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஇருந்தனர்.
இதனையடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி இந்த வழக்கை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.