/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ பள்ளியில் மது அருந்தி 'மட்டை' தலைமையாசிரியர் மீது சர்ச்சை பள்ளியில் மது அருந்தி 'மட்டை' தலைமையாசிரியர் மீது சர்ச்சை
பள்ளியில் மது அருந்தி 'மட்டை' தலைமையாசிரியர் மீது சர்ச்சை
பள்ளியில் மது அருந்தி 'மட்டை' தலைமையாசிரியர் மீது சர்ச்சை
பள்ளியில் மது அருந்தி 'மட்டை' தலைமையாசிரியர் மீது சர்ச்சை
ADDED : மார் 23, 2025 01:52 AM

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே வைரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மது அருந்தி உறங்கி விடுவதாகவும், மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வைரம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் அந்தோணி பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்றும், அப்படியே வரும் வேளையில் பள்ளிக்கு தாமதமாக வந்து, தன் மேஜை மீது அமர்ந்து, மது அருந்தி உறங்கி விடுவதாகவும், மாணவர்களுக்கு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
தொடர்ந்து, அவர் மூன்று தினங்களாக பள்ளிக்கு வராததால், மாணவர்களின் கல்வி பாதிப்படையும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்து, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், மாணவர்களிடம், ஆசிரியர் அந்தோணியின் நடத்தை குறித்து விசாரித்தார்.
மேலும், பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை வட்டாரக் கல்வி அலுவலர் பார்வையிட்டார்.
பின், அங்கிருந்த பெற்றோரிடம், நாளை முதல் பள்ளிக்கு புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவதாகவும், அந்தோணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.