/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் சீறிய காளைகள்தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் சீறிய காளைகள்
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் சீறிய காளைகள்
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் சீறிய காளைகள்
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் சீறிய காளைகள்
ADDED : ஜன 07, 2024 01:56 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, தச்சன்குறிச்சி கிராமத்தில், நேற்று காலை, 8:00 மணிக்கு, தமிழகத்தின், இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. முதலில், கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் போட்டியை துவங்கி வைத்தனர். போட்டியில், ஆன்லைன் வாயிலாக, 700 காளைகளும், 300 மாடுபிடி வீரார்களும் பதிவு செய்து பங்கேற்றனர்.
புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதி காளைகள் சீறி பாய்ந்தன. வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும், சைக்கிள், கட்டில், பீரோ, உள்ளிட்ட பொருட்களும் தங்க காசு, ரொக்கப்பணம் பரிசு வழங்கப்பட்டது.
காளைகள் முட்டியதில், 60 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சிலர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரராக, 12 காளைகளை அடக்கிய முகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவருக்கும் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் 'பல்சர்' பைக்குகளை பரிசாக வழங்கினர்.