/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் போட்டவர் கைதுபீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் போட்டவர் கைது
பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் போட்டவர் கைது
பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் போட்டவர் கைது
பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் போட்டவர் கைது
ADDED : ஜன 06, 2024 01:16 PM
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரான கணேசமூர்த்தி, 38, என்பவர், கடந்த டிச., 27ம் தேதி விளையாட்டாக, பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டரை தயார் செய்து, அவரது நண்பர்கள் ஆறு பேர் மட்டுமே உள்ள 'வாட்ஸாப்' தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை அவர்களில் யாரோ ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விட்டார். மக்களை பீதிக்குள்ளாக்கிய இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் வெளியிட்ட கணேசமூர்த்தி மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று, கணேசமூர்த்தியை கைது செய்தனர்.