/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ திருச்சி ரவுடி என்கவுன்டர் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரிக்கை திருச்சி ரவுடி என்கவுன்டர் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரிக்கை
திருச்சி ரவுடி என்கவுன்டர் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரிக்கை
திருச்சி ரவுடி என்கவுன்டர் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரிக்கை
திருச்சி ரவுடி என்கவுன்டர் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2024 09:01 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், திருச்சி ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக, ரவுடியின் தாய் மல்லிகா தரப்பில், ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி திருவரங்குளம் அருகே தைல மரக்காட்டு பகுதியில் கடந்த 11ம் தேதி போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, பதுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை செய்கிறார்.
தொடர்ந்து, போலி என்கவுன்டரில் தனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும், இச்சம்பவத்தில் நீதிபதி, நீதி விசாரணை நடத்த வேண்டும். எனவும், ரவுடியின் தாய் மல்லிகா தரப்பில், வக்கீல் பிரபாகரன் நேற்று புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யாவிடம் மனு அளித்தார்.
மேலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி நீதிமன்றத்தில், வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ. நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கிடையில், ஆர்.டி.ஓ. அலுவகத்தில், என்கவுன்டர் தொடர்பாக, வரும் 19ம் தேதி ஆர்.டி.ஓ. பொது விசாரணை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.