/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ மாநகராட்சியாக்க எதிர்ப்பு 8 கிராமங்களில் சாலை மறியல் மாநகராட்சியாக்க எதிர்ப்பு 8 கிராமங்களில் சாலை மறியல்
மாநகராட்சியாக்க எதிர்ப்பு 8 கிராமங்களில் சாலை மறியல்
மாநகராட்சியாக்க எதிர்ப்பு 8 கிராமங்களில் சாலை மறியல்
மாநகராட்சியாக்க எதிர்ப்பு 8 கிராமங்களில் சாலை மறியல்
ADDED : ஜூன் 06, 2024 08:45 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதோடு, 11 ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், இரண்டு மாதங்களாக, தங்களது ஊராட்சிகளை மாநகராட்சியாக்கக் கூடாது என கூறி, 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்களது ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை திட்டம் பறிபோகும். சொத்து வரி, தண்ணீர் வரி, வீட்டு வரி உயரும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்கு தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், தமிழக அரசை கண்டித்தும், 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தியும், புதுக்கோட்டை பகுதிகளில் எட்டு இடங்களில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால், அந்த பகுதியில், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.