/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி காத்திருப்பு பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி காத்திருப்பு
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி காத்திருப்பு
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி காத்திருப்பு
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி காத்திருப்பு
ADDED : ஜூன் 07, 2024 07:13 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணி முதற்கட்டமாக கடந்த ஆண்டில் 2023 மே மாதம் தொடங்கியது.
இதில், 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் துறையினர் குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது, தங்க அணிகலன்கள், வட்ட சில்லுக்கள், கண்ணாடி மணிகள், படிகக்கல் மணிகள், சுடுமண் விளக்கு, இரும்பிலான பொருட்கள், செங்கல் கட்டுமான நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றது. முதற்கட்ட அகழாய்வு கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. தொடர்ந்து, 2-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து, 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக இடம் தேர்வு மற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணிக்கான உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'அனுமதி வந்ததும் 2-ம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கப்படும்; அனுமதிக்காக காத்திருக்கிறோம்' என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.