ADDED : ஜூலை 12, 2024 11:17 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அய்யாவயல் பகுதியில், நேற்று ராஜாபட்டியைச் சேர்ந்த வீரைய்யா, 55, என்ற விவசாயி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து, மழை பெய்த நிலையில், அங்குள்ள பனை மரத்தின் கீழ் வீரையா அமர்ந்திருந்தார். அப்போது, இடி, மின்னல் தாக்கியதில் வீரைய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வெள்ளனுார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.