/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ பொற்பனைக்கோட்டையில் பவள மணிகள் கண்டெடுப்பு பொற்பனைக்கோட்டையில் பவள மணிகள் கண்டெடுப்பு
பொற்பனைக்கோட்டையில் பவள மணிகள் கண்டெடுப்பு
பொற்பனைக்கோட்டையில் பவள மணிகள் கண்டெடுப்பு
பொற்பனைக்கோட்டையில் பவள மணிகள் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 24, 2024 10:24 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், இரண்டாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இங்கு ஏற்கனவே, மை தீட்டும் கோல், செம்பு ஆணி, மாவுக்கல், கண்ணாடி மணிகள், பளிங்கு கல் மணிகள் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம், செம்பழுப்பு நிறத்தில் உள்ள அரிய வகை, 'கார்னீலியன்' எனும் சூதுபவள மணிகள், கருமை நிறத்தில், 'அகேட்' மணி, கருநீல நிறத்தில், 'அமதீஸ்ட்' எனும் செவ்வந்திக்கல் மணி உள்ளிட்ட 52 மணிகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், நேற்று இரண்டு சூதுபவள மணிகள் கிடைத்தன. அதிலும் ஒன்று முற்றுப்பெறாமல் உள்ளது. அதே போல, அகேட் மணி ஒன்றும் கிடைத்துள்ளது. நேற்று வரை, 593 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதுபோல, கடலுார் மாவட்டம், மருங்கூரில் நடக்கும் அகழாய்வில் ராஜராஜன் செம்பு நாணயம், பெண்கள் விளையாடும் சுடுமண்ணால் ஆன வட்டச்சில், கழுத்தில் அணியும் பச்சை நிற கண்ணாடி மணி, ரோம் நாட்டினர் பயன்படுத்திய பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், நேற்று, 4.7 செ.மீ., நீளம், 3.6 கிராம் எடையுள்ள, செம்பாலான கோல் ஒன்று கிடைத்தது. இது, பெண்கள், கண்களுக்கு மை தீட்டும் அஞ்சனக்கோல் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.