ADDED : ஜூலை 26, 2024 12:56 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், 26. இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 26 நாட்களுக்கு முன், கிடாவெட்டு பூஜைக்காக, சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பினார். கடந்த 19ம் தேதி கப்பலில் இருந்த போது, மற்றொரு கப்பலுடன் மோதி ஏற்பட்ட தீயில் சண்முகம் இறந்தார்.
சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு விமான மூலம் எடுத்து வரப்பட்ட அவரின் உடல், சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அவரின் உடலை பார்த்து, சண்முகத்தின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். பின், உடல், மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.