/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சிறுமியை வற்புறுத்தியவர் சிறையில் அடைப்புசிறுமியை வற்புறுத்தியவர் சிறையில் அடைப்பு
சிறுமியை வற்புறுத்தியவர் சிறையில் அடைப்பு
சிறுமியை வற்புறுத்தியவர் சிறையில் அடைப்பு
சிறுமியை வற்புறுத்தியவர் சிறையில் அடைப்பு
ADDED : ஜன 31, 2024 01:38 AM
பெரம்பலுார்:-கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்,21. இவர், திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்தபோது, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பார்த்திபன் அந்தப் பெண்ணின் சொந்த ஊரான அரியலுாருக்கு சென்றபோது, பெண்ணின் தங்கையோடு போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து, அந்த 16 வயது சிறுமியும், பார்த்திபனும் மொபைல் போனில் வாட்ஸாப் வாயிலாக போட்டோக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், பார்த்திபன் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தினார். இதற்கு சிறுமி மறுத்தார். வாட்ஸாப்பில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டினார்.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தார்.