/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/விஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைவிஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
விஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
விஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
விஜிலென்ஸ் கண்காணிப்பு வளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
ADDED : ஜன 10, 2024 11:54 PM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியை, பி.டி.ஓ.,க்கள் முதல் திட்ட இயக்குனர் வரை உள்ள அலுவலர்கள் கூட்டுச் சேர்ந்து, பொய் கணக்கு எழுதி முறைகேடு செய்துள்ளனர்.
இது குறித்து, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு, ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில், புகார் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறை ரீதியான விசாரணையும் நடந்தது. இதில், 59 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்த அறிக்கையை, விசாரணை அதிகாரியான இணை இயக்குனர் அருண்மணி, அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், பெரம்பலுார் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனர் உத்தரவுப்படி, பெரம்பலுார் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாவட்ட ஊழல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பிரிவு போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர், என குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இயக்குனரக போலீஸ் அதிகாரிகள், பெரம்பலுாரில் முகாமிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நடந்துள்ள நிதி முறைகேடு, ஊழல் குறித்து ரகசியமாக விசாரித்து வருவதாக தெரிகிறது.
விசாரணையில், ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் பல கோடி மதிப்பில் பல ஏக்கர் நிலம், பங்களா, பஸ், கார் என அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் இல்லாத தனி அலுவலர் காலக்கட்டத்திலும், 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்தில், வரவு - செலவு கணக்குகளை முறையாக ஆய்வு செய்யவும்.
இந்த காலக்கட்டத்தில், ஊழல் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.