/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ 'ஓசி' மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி 'ஓசி' மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
'ஓசி' மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
'ஓசி' மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
'ஓசி' மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
ADDED : செப் 14, 2025 03:37 AM
பெரம்பலுார்:'ஓசி'யில் மது கேட்டு தொல்லை கொடுத்த லாரி டிரைவரை கொலை செய்து, உடலை எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 37; லாரி டிரைவர். பல வழக்குகளில் சிறை சென்று திரும்பியவர். மது போதைக்கு அடிமையான இவர், நேற்று காலை கொளத்துார் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இடத்துக்கு சென்று, இலவசமாக மது கேட்டு உள்ளார்.
தகராறில், அங்கிருந்தோர், சுரேஷை சரமாரியாக தாக்கினர். அவர் உயிரிழந்ததால், அவரது உடலை தீ வைத்து எரிக்க முயன்றனர்.
வி.ஏ.ஓ., மருவத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தார். மாவட்ட எஸ்.பி., மற்றும் போலீசார் விசாரித்து, இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.