/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை 8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
ADDED : செப் 15, 2025 08:41 PM

பெரம்பலூர் : கணவனை இழந்த வேதனையில் இருந்த பெண் ஒருவர் குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கவிதா(23). இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த நீலகண்டன் தற்கொலை செய்து கொண்டார். இதனால், கவிதா, அதே கிராமத்தில் வசித்த அவரது சகோதர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இல்லாததால், குழந்தையை வளர்ப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கவிதா இன்று மாலை 3:45 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 8 மாத குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில், படுகாயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தையும் இறந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.