/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ ரூ.11 லட்சம் பணம் மோசடி தி.மு.க., பேரூராட்சி தலைவர் மகனிடம் போலீஸ் விசாரணை ரூ.11 லட்சம் பணம் மோசடி தி.மு.க., பேரூராட்சி தலைவர் மகனிடம் போலீஸ் விசாரணை
ரூ.11 லட்சம் பணம் மோசடி தி.மு.க., பேரூராட்சி தலைவர் மகனிடம் போலீஸ் விசாரணை
ரூ.11 லட்சம் பணம் மோசடி தி.மு.க., பேரூராட்சி தலைவர் மகனிடம் போலீஸ் விசாரணை
ரூ.11 லட்சம் பணம் மோசடி தி.மு.க., பேரூராட்சி தலைவர் மகனிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 26, 2024 12:43 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மனைவி கஸ்துாரி, 47. இவரிடம், பேரூராட்சி துணை தலைவரும், தி.மு.க., பேரூர் செயலருமான செல்வலட்சுமி என்பவர், தன் கணவர் சேகருக்கு சொந்தமான நிலத்தை, 11 லட்சம் ரூபாய்க்கு விற்க சம்மதித்தார். இதை தொடர்ந்து, கஸ்துாரி 11 லட்சம் ரூபாயை பல தவணைகளில் செல்வலட்சுமி, அவரது கணவர் சேகர், மகன் சந்தோஷ்குமார், மாமியார் நல்லம்மாள் ஆகியோர் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற பிறகும் நிலத்தை கஸ்துாரிக்கு கிரையம் செய்து தராமல் செல்வலட்சுமி குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யிடம் கஸ்துாரி புகார் கொடுத்தார்.
புகாரின் படி, பெரம்பலுார் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று செல்வலட்சுமியின் மகன் சந்தோஷ்குமாரை, எஸ்.பி., அலுவலகத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே புகார் கொடுத்த கஸ்துாரி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி., ஆபீஸ் முன்பு நேற்று மதியம் 1:00 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அவர் மயக்கமடைந்தார்.