Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'நம்மை நாமே பாதுகாப்போம்' முறையில் பெண்களுக்கு...  மாவட்டத்தில் இதுவரை, 500 பழங்குடியின மாணவிகள் பயன்

 'நம்மை நாமே பாதுகாப்போம்' முறையில் பெண்களுக்கு...  மாவட்டத்தில் இதுவரை, 500 பழங்குடியின மாணவிகள் பயன்

 'நம்மை நாமே பாதுகாப்போம்' முறையில் பெண்களுக்கு...  மாவட்டத்தில் இதுவரை, 500 பழங்குடியின மாணவிகள் பயன்

 'நம்மை நாமே பாதுகாப்போம்' முறையில் பெண்களுக்கு...  மாவட்டத்தில் இதுவரை, 500 பழங்குடியின மாணவிகள் பயன்

ADDED : மார் 11, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நீலகிரி போலீசார் சார்பில், 'நம்மை நாமே பாதுகாப்போம்' என்ற முறையில், 'அக்னி' தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு வாயிலாக, பணிக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் தங்களை தற்காத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் அனைத்து தாலுகாவிலும் நடத்த, போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த பயிற்சிகள், மாவட்டத்தின் கடை கோடியில் உள்ள பழங்குடியின பள்ளிகளில் துவக்கப்பட்டது.

அதில், தேவாலா பழங்குடியினர் உயர்நிலை பள்ளியில் பயிற்சி முகாமை துவங்கிய போது, தற்காப்பு பயிற்சி என்பதை அறியாத மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன்,பயிற்சியாளர் உதவியுடன் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அதே பள்ளியில், முதன் முறையாக, 'அக்னி' தற்காப்பு பயிற்சிக்கான 'லோகோ' எஸ்.பி., சார்பில் வெளியிடப்பட்டது.

இந்த பயிற்சியில் ஈடுபட்டு வரும், மாணவிகள், வினோதினி, சரண்யா, சுமித்ரா ஆகியோர் கூறு கையில்,''இது போன்ற தற்காப்பு கலைகள் குறித்து தற்போது தான் தெரிந்து கொண்டோம்.

தொடர்ந்து பயிற்சி எடுத்து சிறந்த கராத்தே வீரராக அல்லது போலீசாக பணியில் சேர வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பள்ளியில் அளிக்கும் இத்தயை பயிற்சியாக எங்கள் மீது தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் தாங்களே, தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு சிறந்த முயற்சி. அதில், முதன் முதலாக பழங்குடியின மாணவிகளுக்கு காவல்துறை இது போன்ற பயிற்சி வழங்கிய பெருமையாக உள்ளது. இதனை எங்களுக்கு அறிமுகம் செய்த மாவட்ட எஸ்.பி., கூறியதை போல், எதிர்காலத்தில் நாங்களும் காவல் துறையில் அதிகாரிகளாக வர முயற்சி கொள்வோம்,'' என்றனர். இதை தொடர்ந்து, ஊட்டி சிறுவர் மன்றத்தில், அரசு செவிலியர் கல்லுாரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது.

பெரும்பாலான மாணவிகள் இந்த பயிற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஆசிரியர் அர்ஜூன் கூறுகையில்,''பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியருக்காக, முதன் முறையாக நீலகிரியில் போலீஸ் சார்பில் துவக்கப்பட்ட, இந்த 'அக்னி' தற்காப்பு பயிற்சி மூலம், நம் பாதுகாப்புக்காக வேறு ஒருவரை நம்பி இல்லாமல், மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

கராத்தே, டேக்வான் டோ உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது,'' என்றார்.

பழங்குடி மாணவிகள் ஆர்வம்

எஸ்.பி., நிஷா கூறுகையில், ''இந்த பயிற்சி மாணவிகளுக்கு கொடுப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டபோது, மாநில எல்லையில் பழங்குடியினர் பள்ளியில் துவக்க முடிவு செய்தோம். இயல்பாக பயந்த சுபாவம் கொண்ட பழங்குடி மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். தற்காப்பு பயிற்சி மாணவிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த பயிற்சியால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இதுவரை, 500 பழங்குடி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வியிலும் அவர்கள் மேம்பட வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, ஊட்டியில் துவக்கப்பட்ட அக்னி தற்காப்பு பயிற்சி, குன்னுார் மற்றும் மாவட்டம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us