/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாலையோரம் உலா வரும் காட்டு யானைகள்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை சாலையோரம் உலா வரும் காட்டு யானைகள்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை
சாலையோரம் உலா வரும் காட்டு யானைகள்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை
சாலையோரம் உலா வரும் காட்டு யானைகள்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை
சாலையோரம் உலா வரும் காட்டு யானைகள்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை
UPDATED : செப் 10, 2025 06:46 AM
ADDED : செப் 09, 2025 09:54 PM

கூடலுார்; 'கூடலுார் குடோன் அருகே, கோழிக்கோடு சாலையோரம் இரவில் காட்டு யானைகள் உலா வருவதால், வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார், கோழிக்கோடு சாலையில் குடோன் -நாடுகாணி போஸ்ட் ஆபீஸ் இடைப்பட்ட, 2 கி.மீ., துாரம் சாலையின் இரு புறமும் சிறு வனப்பகுதி உள்ளது.
நீர்நிலைகள் நிறைந்த இப்பகுதி, கோடையிலும் பசுமையாக காணப்படும். இதனால், இப்பகுதிக்கு காட்டு யானைகள், அடிக்கடி முகாமிட்டு செல்கிறது.
தற்போது, இங்கு குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானை, இரவு நேரங்களில் சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள், யானைகள் அருகே வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதி சாலையோரங்களில் இரவில் காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.
எனவே, வாகன ஓட்டுனர்கள் குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இப்பகுதியை கடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.