/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நேந்திரன் வாழையில் நோயின் தாக்கம்; விலை இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் சுமை நேந்திரன் வாழையில் நோயின் தாக்கம்; விலை இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் சுமை
நேந்திரன் வாழையில் நோயின் தாக்கம்; விலை இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் சுமை
நேந்திரன் வாழையில் நோயின் தாக்கம்; விலை இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் சுமை
நேந்திரன் வாழையில் நோயின் தாக்கம்; விலை இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் சுமை
ADDED : செப் 09, 2025 09:55 PM

பந்தலுார்; கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், நோய் பாதிப்பு மற்றும் விலை குறைந்து வருவதன் காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேந்திரன் வாழை விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், அதிக அளவிலான விவசாயிகள் நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் படித்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நேந்திரன் வாழை விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சொந்த நிலங்கள் தவிர குத்தகைக்கு நிலங்களை வாங்கி வாழை விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, விலை வீழ்ச்சி மற்றும் நோய் தாக்கம் காரணமாக இந்த விவசாயத்தை சார்ந்த விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கடந்த,30 ஆண்டுகளாக நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி வர்கீஸ் கூறுகையில், ''பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகிறோம்.
அதில், நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, ஓணம் பண்டிகையின் போது ஒரு கிலோ வாழைகாய்,32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு வெறும், 20- ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில், நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
அத்துடன் தற்போது வாழைகளில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதால், வாழை மரங்கள் காய்ந்து வாழை தார்கள், வளர்ச்சி இன்றி காணப்படுகிறது.
இதனால், மார்க்கெட்டில் இந்த வாழை தார்கள் விற்பனை செய்ய முடியாத நிலையில் மேலும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், அதிகாரிகள் கண்டு கொள்ளாதது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாக மாறி உள்ளது,'' என்றார்.