/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சேறும், சகதியுமாக உள்ள குந்தா அணை துார் வாருவது எப்போது? உலக வங்கி நிதியை மீண்டும் பெற வலியுறுத்தல்சேறும், சகதியுமாக உள்ள குந்தா அணை துார் வாருவது எப்போது? உலக வங்கி நிதியை மீண்டும் பெற வலியுறுத்தல்
சேறும், சகதியுமாக உள்ள குந்தா அணை துார் வாருவது எப்போது? உலக வங்கி நிதியை மீண்டும் பெற வலியுறுத்தல்
சேறும், சகதியுமாக உள்ள குந்தா அணை துார் வாருவது எப்போது? உலக வங்கி நிதியை மீண்டும் பெற வலியுறுத்தல்
சேறும், சகதியுமாக உள்ள குந்தா அணை துார் வாருவது எப்போது? உலக வங்கி நிதியை மீண்டும் பெற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2024 08:22 PM
ஊட்டி : 'திரும்பி சென்ற உலக வங்கி நிதியை திரும்ப பெற்று, குந்தா அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா, மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடியை கொண்டது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி, 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர் பிடிப்பு பகுதியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பல ஏக்கரில் உள்ளது. பருவ மழை காலங்களில் தோட்டங்கள்; நீரோடைகளில் அடித்து வரும் சேறும், சகதியும் அணையில் சேகரமாகிறது.
பல ஆண்டுகளாக இவற்றை துார்வாரப்படாமல் உள்ளதால், சிறிய மழைக்கு கூட அணை முழு கொள்ளளவை எட்டி விடுகிறது. மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணை நீர், மின் உற்பத்திக்கு பயன்படுவதுடன், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், பில்லுார், மேட்டுப்பாளையம் நீரோடை வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது. அங்குள்ள பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
திரும்பி சென்றஉலக வங்கி நிதி
குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், நீலகிரியில் 12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன. குந்தா உட்பட மாவட்டத்தில் உள்ள அணை, மின் நிலையங்களை துார்வாரி பராமரிக்க அந்தந்த மின் நிலையத்தின் திட்ட அறிக்கைக்கு ஏற்ப உலக வங்கி நிதி ஒதுக்கியது.
அதில், பெரும்பாலான அணை மற்றும் மின் நிலையங்கள் பராமரிக்கப்பட்டது. ஆனால், கடந்த, 12 ஆண்டுக்கு முன்பு குந்தா அணையை முழுமையாக துார்வார ஒதுக்கப்பட்ட உலக வங்கி நிதி, அரசியல் தலையீடு காரணங்களால் திரும்பி சென்றது.
திரும்பி சென்ற நிதியை மீண்டும் திரும்ப பெற்று அணையை துார்வாராமல் மின் வாரியம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. இதனால், தற்போது,குந்தா அணையின், 89 அடியில் கிட்டத்தட்ட, 70 சதவீதம் சகதி நிரம்பியுள்ளது.
சகதி கலந்த தண்ணீர் ராட்சத குழாயில் செல்வதால் மின் உதிரி பாகங்கள் அடிக்கடி பழுதாகி மின் உற்பத்தி தடைப்படுவது வாடிக்கையாகி விட்டது.
மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குந்தா அணைக்கு ஒதுக்கப்பட்ட உலக வங்கி நிதி திரும்ப சென்றது உண்மைதான். அதே சமயத்தில் தலைமை அலுவலகத்திலிருந்து ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகளுக்கு அணையின் நிலை குறித்து தெரிவித்து வருகிறோம்.
அவ்வப்போது திட்ட அறிக்கையும் அனுப்பப்படுகிறது. ஆனால், துார்வார இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.