/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நேந்திரன் வாழை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி நேந்திரன் வாழை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
நேந்திரன் வாழை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
நேந்திரன் வாழை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
நேந்திரன் வாழை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 05, 2024 08:21 PM

கூடலுார் : கூடலுாரில் நேந்திரன் வாழையின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து அந்த நிலையில், கிலோவுக்கு, 40 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலுார், பந்தலுார் பகுதியில் தேயிலை, காபி, குறுமிளகு, கிராம்பு, பாக்கு ஏலக்காய் போன்ற நீண்ட கால பயன் தரும் பயிர்கள் மட்டுமின்றி குறுகிய கால பயன் தரும் நெல், நேந்திரன் வாழை, இஞ்சி மற்றும் காய்களையும் பயிரிட்டு வருகின்றனர்.
இங்கு விளையும் நேந்திரன் வாழை, தமிழகம் மற்றுமின்றி கேரளாவுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளா மார்க்கெட் விலையின் அடிப்படையில், கூடலுாரில் நேந்திர வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
நடப்பாண்டு துவக்கம் முதல், கொள்முதல் நிலை கிலோ, 20 ரூபாய் வரை இருந்ததால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். கடந்த மாதம் துவக்கம் வரை, விலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், நேந்திர விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக, நேந்திர வாழையின் விலை உயர்ந்து வியாபாரிகள் கிலோ, 40 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
நேற்று கிலோ 43 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். தொடர்ந்து விலை வீழ்ச்சில் அடைந்து வந்த நிலையில், தொடரும் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த பல மாதங்களுக்கு பின், நேந்திரன் வாழைக்கு தற்போது நல்ல விலை கிடைத்திருப்பது, ஏற்கனவே, ஏற்பட்ட நஷ்டத்தை ஓரளவு ஈடு செய்ய முடியும்,' என்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'தொடர் மழையினால் கர்நாடகா, சத்தியமங்கலம் கூடலுார் உள்ளிட்ட பல பகுதிகளில் நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து, வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளது,' என்றனர்.