Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்

28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்

28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்

28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்

ADDED : ஜூன் 12, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
ஊட்டி:'நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த, கிலோவுக்கு, 2 ரூபாய் மானியத்தை விரைவில் வழங்க வேண்டும்,' என, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் 'இன்கோ சர்வ்' ( கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டில், மஞ்சூர், எடக்காடு, பிக்கட்டி, கிண்ணக்கொரை, இத்தலார், மேற்குநாடு, கைக்காட்டி, கரும்பாலம், கட்டபெட்டு, எப்பநாடு, பிராண்டியா, சாலிஸ்பரி, நஞ்சநாடு உள்ளிட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தகூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 28,000 பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு, தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் பசுந்தேயிலையை அந்தந்த தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்


மாவட்டத்தில் கடந்த, 24 ஆண்டுக்கு மேலாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு, 30 ரூபாய் வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.

சந்தையில் விற்கப்படும் விலையை பொறுத்து அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நிர்ணயிக்கும் விலையை தொழிற்சாலை உறுப்பினர்கள் மாதந்தோறும் பெற்று வருகின்றனர். இதற்கிடையே, 'மாநில அரசின் மானிய அறிவிப்பு வந்தால் பொருளாதார நெருக்கடி சிக்கலை தீர்க்கலாம்,' என, விவசாயிகள் எதிர்பார்த்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதல்வர் அறிவித்த ரூ. 8.50 கோடி


இந்நிலையில், கடந்த பிப்., மாதம் பொள்ளாச்சியில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 2 ரூபாய் மானியம் வழங்கப்படும்,' என, அறிவித்தார்.

அந்த நிகழ்ச்சியிலேயே நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து, 8.50 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கினார். அதன்படி, நீலகிரியில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினராக உள்ள, 28,000 பேருக்கு, 2022ம் ஆண்டு ஏப்., மாதம் முதல், 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உறுப்பினர்கள் வினியோகித்த பசுந்தேயிலையை கணக்கிட்டு கிலோவுக்கு, 2 ரூபாய் மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுவரை உறுப்பினருக்கு வரவில்லை


சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமன் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில், நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 2 ரூபாய் மானியம் அறிவித்த கையோடு மேடையில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து, அதற்கான காசோலையும் வழங்கினார். ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, 'நிதிநிலை அறிக்கைக்கான அரசாணை, மாநில அரசால் வெளியிடப்படவில்லை. வந்ததும் மானியம் வந்துவிடும்.

நாங்களும் அரசை வலியுறுத்தி வருகிறோம்,' என, தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு இந்த மானிய தொகை பேருதவியாக இருக்கும் என்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us