/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குளம் அமைக்க மரங்களை வெட்டியதால் அதிருப்தி குளம் அமைக்க மரங்களை வெட்டியதால் அதிருப்தி
குளம் அமைக்க மரங்களை வெட்டியதால் அதிருப்தி
குளம் அமைக்க மரங்களை வெட்டியதால் அதிருப்தி
குளம் அமைக்க மரங்களை வெட்டியதால் அதிருப்தி
ADDED : ஜூன் 12, 2024 01:14 AM

பந்தலுார், ஜூன் 12--
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, மண்ணாத்தி வயல் பகுதியில் கோவிலை ஒட்டிய பகுதியில் ஊராட்சி, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குளம் வெட்டி தண்ணீரை சேமிப்பதற்காக, அந்த பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டு குளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'மழை பெய்து தண்ணீர் பெருக மரங்கள் வளர்க்க வேண்டும்,' என, ஊராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறது. மறுபக்கம் வளர்ச்சி பணிகள் என்று கூறி குளம் வெட்டுவதற்கு மரங்களை அகற்றி பணி மேற்கொள்ளப்பட்டு வருவது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில், 'இது போல மரங்களை முழுமையாக அகற்றி அங்கு குளங்களை வெட்டும் பணிக்கு பதில், குளங்கள் அமைப்பதற்கு ஏதுவான பகுதியில் அந்த பணிகளை மேற்கொள்ளவும், மரங்களை அதிகமாக வளர்க்கவும் ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்,' என்றனர்.