/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/முதுமலையில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு : 165 வன ஊழியர்கள் பங்கேற்புமுதுமலையில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு : 165 வன ஊழியர்கள் பங்கேற்பு
முதுமலையில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு : 165 வன ஊழியர்கள் பங்கேற்பு
முதுமலையில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு : 165 வன ஊழியர்கள் பங்கேற்பு
முதுமலையில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு : 165 வன ஊழியர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 28, 2024 11:35 PM

கூடலுார்:முதுமலையில் நடந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியில் 165 வன ஊழியர்கள் மற்றும் 31 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
முதுமலையில், ஆண்டுதோறும் பருவ மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு பருவ மழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நவ., மாதம் 6 நாட்கள் நடந்தது. நவ., 4, 5ம் தேதிகளில் முதல் முறையாக தட்டாம் பூச்சிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது.
தொடர்ந்து, தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் நடந்தது. டிச., 30, 31ம் தேதிகளில், அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. அதில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணிகள், முதுமலை, ஊட்டி வனக் கோட்டம் தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலாக்கோட்டை வனச்சரகங்கள், முதுமலை மசினகுடி கோட்டம் மசினகுடி, சிங்கார வனச்சரகங்கள், மூக்குருத்தி தேசிய பூங்கா பகுதிகளில் நேற்று, ஒரு நாள் நடந்தது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட, 31 இடங்களில், 165 வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 31 தன்னார்வலர்கள் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, 31 நீர்நிலை பகுதிகளில், வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈர நில பறவைகள் குறித்து கண்காணித்து அதன் விபரங்களை பதிவு செய்வர். அதன் அடிப்படையில் ஈர நில பறவைகள் குறித்து விபரங்கள் தெரியவரும்,' என்றனர்.