/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள் தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள்
தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள்
தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள்
தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள்

பராமரிக்கப்படாத தடுப்பணைகள்
கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள முக்கிய தடுப்பணைகள் அனைத்தும் பராமரிக்காமல் விட்டதால் சேறும்,சகதியும் நிறைந்து தண்ணீரை சேமிக்க முடியாத நிலையால் குடிநீர் வீணாகிறது. அவற்றை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்கப்படாததால் கோடையில் பல கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டி புறநகர் பகுதிகள், கூடலுார், பந்தலுார், கீழ்கோத்தகிரி உட்பட பல பழங்குடியினர் வசிக்கும் கிராமப்பகுதிகளில், தண்ணீருக்காக மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலையும் உள்ளது.
கூடலுார்
கூடலுார் நகராட்சி பகுதிக்கு ஓவேலி ஆத்துார் ஹெலன், பெல்மாடி, இரும்புபாலம், தொரப்பள்ளி குடிநீர் திட்டங்களில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், இரும்புபாலம், தொரப்பள்ளி குடிநீர் திட்டங்களில் மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.
பந்தலுார்
பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 92 குடிநீர் கிணறுகள் அமைந்துள்ளன. இங்குள்ள குடிநீர் கிணறுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும், நீர் ஆதாரங்களில் முழுமையாக ஆய்வு செய்து, குடிநீர் சப்ளை செய்வதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.
160 கிணறுகள் இருந்தும் வீண்
சேரங்கோடு ஊராட்சியில், 160க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் அமைந்துள்ளதுடன், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழும் குடிநீர் வினியோகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலை தொடர்கிறது.
குன்னுார்
குன்னுார் பகுதியில், பிப்., முதல் ஏப்., மாதங்களில் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேடான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தாழ்வான இடங்களில் குடிநீர் எளிதாக செல்லும் நிலையில, மிக உயரமான இடங்களில் செல்வதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.