/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குப்பை கூடமாக மாறிய நுாலக கட்டடம் வாசகர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தி குப்பை கூடமாக மாறிய நுாலக கட்டடம் வாசகர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தி
குப்பை கூடமாக மாறிய நுாலக கட்டடம் வாசகர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தி
குப்பை கூடமாக மாறிய நுாலக கட்டடம் வாசகர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தி
குப்பை கூடமாக மாறிய நுாலக கட்டடம் வாசகர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தி
ADDED : மே 14, 2025 11:04 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் உள்ள நுாலக கட்டடம் குப்பை கழிவுகளில் சேகரிப்பு கூடமாக மாறி வருவது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
பந்தலுார் அருகே மாநில எல்லை பகுதியாக அம்பலமூலா உள்ளது. இங்கு போலீஸ் நிலையம் மற்றும் கடைவீதிகள், அரசு துவக்கப்பள்ளி கட்டடங்களை ஒட்டி நுாலக கட்டடம் அமைந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், பல்வேறு நுால்களை இங்கு வைத்து வாசகர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதனால், பலர் பயனடைந்து வந்தனர்.
இந்த கட்டடத்தில் தற்போது நெலாக்கோட்டை ஊராட்சியில் சேகரிக்கும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகளை கொண்டு வந்து சேகரித்து வருகின்றனர். இங்கிருந்த அரிய நுால்களை எங்கு கொண்டு சென்றனர் என்பது தெரியவில்லை.
பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில், நுாலக கட்டடத்தின் கதவு மற்றும் சுவரை இடித்து, அதற்கான இயந்திரம் உள்ளே வைக்கப்பட்டது.
அறிவு சார்ந்த நுால்களை தேக்கி வைக்க கூடிய, நுாலக கட்டடத்தில் குப்பை கழிவுகளை நிறைத்து வைத்துள்ளது மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களை கடுப்படைய செய்து உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் மீண்டும் நுாலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.