/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி
மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி
மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி
மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி
ADDED : ஜூன் 12, 2025 11:33 PM

ஊட்டி; லகிரியில் தொடர்ந்த மழையால் எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஊட்டி அருகே போர்த்திஹாடா நீர்பிடிப்பு பகுதி எமரால்டு, அவலாஞ்சி அணைகளுக்கு முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. சமீபத்தில் குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக இரு அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
கடந்த மே மாதத்தில் ஒரு வாரம் நீடித்த மழைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இரு அணைகளில், 40 அடி வரை நீர்வரத்து அதிகரித்துள்ளது. மின் உற்பத்தியும் தடையின்றி நடக்கிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக இரு அணைகளில் இருந்து இருப்பிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. தற்போது மேற்கண்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட குந்தா நீரேற்று மின் திட்ட பணி துவங்கி இருப்பதால், இருப்பில் உள்ள தண்ணீர் இடையூறாக இருந்தால் வெளியேற்றப்பட உள்ளது,' என்றனர்.