/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/முள்ளி, கோபனாரியில் கண்காணிப்பு தீவிரம்முள்ளி, கோபனாரியில் கண்காணிப்பு தீவிரம்
முள்ளி, கோபனாரியில் கண்காணிப்பு தீவிரம்
முள்ளி, கோபனாரியில் கண்காணிப்பு தீவிரம்
முள்ளி, கோபனாரியில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஜன 25, 2024 12:11 AM
மேட்டுப்பாளையம் : குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள முள்ளி மற்றும் கோபனாரி செக் போஸ்ட்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதி என்பதால், அவ்வழியாக வரும் வாகனங்கள் முழுவதும் தணிக்கை செய்யப்பட்ட பிறகு தான் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், முள்ளி மற்றும் கோபனாரியில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.
----