/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பொதுமக்களை அச்சுறுத்தும் 'வீடியோ' :- மூன்று பேர் கைதுபொதுமக்களை அச்சுறுத்தும் 'வீடியோ' :- மூன்று பேர் கைது
பொதுமக்களை அச்சுறுத்தும் 'வீடியோ' :- மூன்று பேர் கைது
பொதுமக்களை அச்சுறுத்தும் 'வீடியோ' :- மூன்று பேர் கைது
பொதுமக்களை அச்சுறுத்தும் 'வீடியோ' :- மூன்று பேர் கைது
ADDED : ஜன 13, 2024 01:13 AM

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 'வீடியோ' வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதியில், புலி நடமாடிவருவதாக கடந்த,10-ம் தேதி இரவு சமூக வலைதளத்தில் வீடியோ பகிரப்பட்டது.
இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறை ஆய்வு செய்தபோது, அது 'கிராபிக்ஸ்' செய்யப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது. இதனால், தேவாலா வனவர் பாலகிருஷ்ணன், போலீசில் புகார் கொடுத்தார்.
விசாரணை செய்த போலீசார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போலியான வீடியோ பதிவிட்ட, அத்திக்குன்னா தனியார் எஸ்டேட்டில் வேலை செய்து வரும், வட மாநில தொழிலாளர்கள் யூசுப்அலி, 28, முசேத்துல் அலி, 21, அத்திக்குன்னா பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 24, ஆகியோரை கைது செய்தனர்.
தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் கூறுகையில், ''சமூக வலைதலங்களில், தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.