/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள் ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்

880 வாகனங்கள் பறிமுதல்
இந்நிலையில், கடந்த மூன்றாண்டு காலத்தில், 'கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருட்கள் கடத்தல்,' என, ஊட்டி டிவிஷனில், 285 வாகனம்; கூடலுார், 200, தேவாலா, 115 வாகனம்; ஊட்டி ரூரல், 80 வாகனம்; குன்னுார், 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் நடந்து வருகிறது. இவைகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் உட்பட அதன் அருகே உள்ள காலியிடங்களில் நிறுத்தப்பட்டு, புதர் சூழ்ந்து காணப்படுகின்றன.
போக்குவரத்துக்கும் பாதிப்பு
கூடலுார் நந்தட்டி பகுதியில், கோழிக்கோடு சாலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் வாகன பணிமனைகள் உள்ளிட்ட வாகனம் பழுது நீக்கம் தொடர்பான பணி மனைகள் செயல்பட்டு வருகிறது. அதில், சிலர், வாகனங்களை சாலையில் நிறுத்தி, பழுது பார்க்கும் பணியை மேற்கொள்வதால், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.
சமூக விரோதிகளின் கூடாரம்
குன்னுாரில் நிறுத்தப்பட்டுள்ள பல பழைய வாகனங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. இது போன்ற வாகனங்களை போதை பழக்கத்திற்கு பயன்படுத்துவது, போதை பொருட்களை பதுக்குவது குறித்து, நகராட்சி கூட்டத்தில் பகிரங்கமாக புகார் தெரிவிக்கப்பட்டது.