/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல் துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல்
துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல்
துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல்
துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல்
ADDED : செப் 24, 2025 11:37 PM

கோத்தகிரி: கோத்தகிரி- ஊட்டி வழித்தடத்தில் வனத்துறை சார்பில், வனவிலங்குகள் தண்ணீர் பருக, கட்டுப்பட்டுள்ள செக்டேம்கள் துார்வாரப்படாமல் உள்ளதால், வறட்சி நாட்களில் வனவிலங்குகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வனச்சரகங்களில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் காப்புக்காடுகள் நிறைந்து காணப்படுகிறது. வனப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி, வெளியே வராத நிலையில், வனப்பகுதியில் வனத்துறை சார்பில், செக்டேம்கள் கட்டப்பட்டுள்ளன. சமீப காலமாக, காட்டு செடிகள் மற்றும் புற்கள் முளைத்து, செக்டேம்கள் சுருங்கி உள்ளன. இதனால், மழை நாட்களில், முழுமையாக தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதால், வறட்சி நாட்களில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் வன விலங்குகள் நலன் கருதி, செக்டேம்களை துார்வார முன் வர வேண்டும்.