/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 21, 2025 10:40 PM
கோத்தகிரி; கோத்தகிரி மெட்டுக்கல் பழங்குடியினர் கிராமத்தில், தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில், விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாண்மை மேலாளர் பிரசாந்த் வரவேற்றார். கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் பவித்ரா, கால்நடை பராமரிப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து விளக்கினார். ஊட்டி மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் நிர்மலா, மண்ணின் தன்மை, மண் மாதிரி எடுப்பதன் அவசியம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி மேலாண்மை அலுவலர் மகேஷ், தோட்டக்கலை அலுவலர் கவின் பிரசாத், தோட்டக்கலை அலுவலர் ஐஸ்வர்யா ஆகியோர், அரசின் வேளாண் திட்ட உதவிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன. உதவி தோட்டக்கலை அலுவலர் சவுமியா நன்றி கூறினார்.