ADDED : ஜன 28, 2024 11:41 PM
ஊட்டி;பைன்சோலை பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளால் சுற்றுலா பயணியர் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி-- கூடலூர் சாலையில் பைன்சோலை உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை ரசிக்க அங்கு அதிகளவில் செல்கின்றனர். பைன்சோலை எதிரே பிரதான தேசிய நெடுஞ்சாலையில், ஏராளமான குதிரைகள் சுற்றித்திரிகிறது.
குதிரைகளால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஊட்டி நகரில் சுற்றித்திரியும் குதிரைகள் அனைத்தும் பைன் சோலை பகுதிக்கு விரட்டப்பட்டதால் அங்கு குதிரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குதிரைகளை கட்டுப்படுத்த வேண்டும். என, சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.