/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்
சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்
சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்
சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளை.. கடும் அதிருப்தி...! அமைச்சர் தொகுதியில் தொடரும் அத்துமீறல்

ஆக்கிரமிப்பு அதிகம்
டால்பின்நோஸ் காட்சிமுனை வரை உள்ள அதிகளவிலான ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. சமீபத்தில் இங்கு ஐகோர்ட் நீதிபதிகள் விசிட் செய்த போது உள்ளே செல்ல சிரமப்பட்டதால், கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
யாருக்கு செல்கிறது ?
இங்குள்ள, 8 ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்ல முடியால் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுகிறது. அதில், ஏழை எளிய ஊனமுற்றோருக்கு என இல்லாமல் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் கடைகள் அமைப்பதாகவும், புதிய ஆக்கிரமிப்பு கடைகளிடம் இருந்து ஆளும் கட்சியினர் லாபம் பார்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் வரை புகார் சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பார்க்கிங் கொள்ளை
சாலையில் வாகனங்கள் நிறுத்த பர்லியார் ஊராட்சி தனியாருக்கு டெண்டர் விட்டு இருசக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய்; நான்கு சக்கர வாகனங்களுக்கு,30 ரூபாய்; வேன் மற்றும் மேக்சி கேப்களுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், முறையே, 30,70,100 ரூபாய் என விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தொடரும் தில்லு முள்ளு
கொச்சி சுற்றுலா பயணி கள் கூறுகையில், ''ஒரு காரில் குடும்பத்துடன் இங்கு வந்த போது, 100 ரூபாய் வசூல் செய்தனர். டிக்கெட்டில், 3 கார்களுக்கு, 100 ரூபாய் என பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் 'பிரின்டிங் மிஸ்டேக்' என்கின்றனர். ஆனால், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வசூல் மட்டுமே இங்கு குறிக்கோளாக உள்ளது,'' என்றனர்.
வாழ்வாதாரம் தான்
ஊராட்சி தலைவி சுசீலா கூறுகையில், ''மக்களின் வாழ்வாதாரத்திற்காக வந்து கேட்டனர். இதற்காக புதிய கடைகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம், 12 கடைகளுக்கு ஏலம் விடப்படும். ஏற்கனவே ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.