/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலை பயிர்கள் திட்டத்திற்கு ரூ. 5.45 கோடி ஒதுக்கீடு; விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு மலை பயிர்கள் திட்டத்திற்கு ரூ. 5.45 கோடி ஒதுக்கீடு; விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு
மலை பயிர்கள் திட்டத்திற்கு ரூ. 5.45 கோடி ஒதுக்கீடு; விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு
மலை பயிர்கள் திட்டத்திற்கு ரூ. 5.45 கோடி ஒதுக்கீடு; விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு
மலை பயிர்கள் திட்டத்திற்கு ரூ. 5.45 கோடி ஒதுக்கீடு; விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு
பண்ணை குட்டை அமைக்க நிதி
நீலகிரியில், தோட்டக்கலை மலை பயிர்கள் பரப்பு விரிவாக்க இயக்கத்தின் கீழ், காய்கறிகள், எலுமிச்சை, அத்தி, அவகேடோ, ஸ்டாபெரி, ஆரஞ்ச், மிளகு, பூண்டு மற்றும் இஞ்சி போன்ற பயிர்களுக்கு, 40 சதவீதம் மானியமாக, ஒரு எக்டருக்கு, 13 ஆயிரத்து, 200 ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், பழ நாற்றுகள் மற்றும் இயற்கை இடுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், பண்ணை குட்டை அமைத்திட, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, 75 ஆயிரம் ரூபாய் பசுமை குடில் அமைக்க, சதுர மீட்டருக்கு, 422 முதல், 467.50 ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது.
உரம் தயாரிக்க உதவி
மண்புழு உரம் தயாரிக்க 50 ஆயிரம் ரூபாய்; மண்புழு உரம் படுக்கைகள் அமைக்க, 8,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். அறுவடை பின்செய் நேர்த்தி திட்டத்தின் கீழ், காய்கறி மற்றும் கொய் மலரை சேமித்து விற்பனை செய்ய, 'பிரீ கூலிங் யூனிட்' அமைக்க, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, 35 சதவீதம் மானியமாக, 8.75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
நுண்ணீர் பாசன திட்டம்
தெளிப்பு நீர் பாசன கருவிகள், 100 சதவீத மானியம், புதிதாக டீசல், மின்மோட்டார் வாங்குவோருக்கு, 50 சதவீத மானியத்தில், 15 ஆயிரம் ரூபாய் பண்ணைக்குட்டை அமைக்க, 75 ஆயிரம் ரூபாய், பின்னேற்பு, 50 சதவீத மானியம் வழங்கப்படும்.