Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில் தடை தீர்வுக்கு...புதிய முயற்சி! மறு சுழற்சிக்கு வழி வகுக்க சிறப்பு ஏற்பாடு

'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில் தடை தீர்வுக்கு...புதிய முயற்சி! மறு சுழற்சிக்கு வழி வகுக்க சிறப்பு ஏற்பாடு

'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில் தடை தீர்வுக்கு...புதிய முயற்சி! மறு சுழற்சிக்கு வழி வகுக்க சிறப்பு ஏற்பாடு

'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில் தடை தீர்வுக்கு...புதிய முயற்சி! மறு சுழற்சிக்கு வழி வகுக்க சிறப்பு ஏற்பாடு

ADDED : ஜூலை 29, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
குன்னுார்;நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் 'பிளாஸ்டிக்' பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மறுசுழற்சி பாட்டில்கள் மூலம், 5 ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 18 ஆண்டுகளாக 'பிளாஸ்டிக்' தடை உள்ள நிலையில், கடந்த, 2019ம் ஆண்டு ஆக., 15ம் தேதியில் இருந்து, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் உட்பட, 70 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இதனை முறையாக பராமரிக்காத காரணத்தால், அடிக்கடி பழுது ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதே நேரத்தில், சோதனை சாவடி மையங்களில் 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பதால் சுற்றுலா பயணிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகாண பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தன்னார்வ அமைப்பின் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குன்னுாரில், ஜே.சி.ஐ., தேசிய துணைத் தலைவர் ஹர்ஷவர்த்தனன் ரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், புதிய திட்டம் குறித்து,

ஜே.சி.ஐ., தலைவர் விஜயகாந்த் முத்து கிருஷ்ணன் பேசியதாவது:

நீலகிரியில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பாட்டில் பிரச்னை சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், எல்லையில் சுற்றுலா பயணிகளிடம் பெறப்படும், 'பிளாஸ்டிக்' பாட்டிலுக்கு பதிலாக, மறுசுழற்சி செய்ய கூடிய, 5 ரூபாய் குடிநீர் பாட்டிகளில் தண்ணீர் வழங்கப்படும்.

பயணிகள் 'வாட்டர்' ஏ.டி.எம்.,யை தேடும் நிலை ஏற்படாது. இதற்காக எல்லை பகுதிகளில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு பணி வழங்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் மேம்பாடு, பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகளை நிறைவேற்ற முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.டி.ஓ., மகாராஜ் கூறுகையில்,'' நீலகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளை திறம்பட மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த பணியில் தன்னார்வ அமைப்புகள் கொண்டு வரும் நல்ல முயற்சிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தரும்.

இதனால், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us