/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மண் சரிவு குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மண் சரிவு
குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மண் சரிவு
குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மண் சரிவு
குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மண் சரிவு
ADDED : ஜூலை 29, 2024 11:52 PM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளை சுற்றி மண் சரிவு அதிகரித்து வருகிறது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நிலப்பகுதிகளில் காணப்படும் விரிசல்கள் வழியாக தண்ணீர் வழிந்தோடி, மண்சரிவு ஏற்படுவது தொடர்கிறது.
இதனால், பெரும்பாலான குடியிருப்புகள் இடிந்து விழுவதுடன், மரங்களும் அடியோடு பெயர்ந்து விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அதில், பந்தலுார் அருகே ரிச்மவுண்ட் என்ற இடத்தில், தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளது. பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில், சாலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் முன்பாக, மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதேபோல, இந்த குடியிருப்புகளின் பின்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், குடியிருப்புகள் முழுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர்கள் அச்சத்துடன் குடியிருக்கும் நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.