/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குழந்தையை தாக்கிய சிறுத்தை; காப்பாற்றிய கிராம மக்கள்குழந்தையை தாக்கிய சிறுத்தை; காப்பாற்றிய கிராம மக்கள்
குழந்தையை தாக்கிய சிறுத்தை; காப்பாற்றிய கிராம மக்கள்
குழந்தையை தாக்கிய சிறுத்தை; காப்பாற்றிய கிராம மக்கள்
குழந்தையை தாக்கிய சிறுத்தை; காப்பாற்றிய கிராம மக்கள்
ADDED : ஜன 04, 2024 10:44 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே குழந்தையை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பந்தலுார் அருகே கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக சிறுத்தை உலா வருகிறது. வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை சேவியர் மட்டம் என்ற இடத்தில் வசந்த் என்பவரின் நான்கு வயது குழந்தை வீட்டின் முன்பாக விளையாடி உள்ளது. அங்கு வந்த சிறுத்தை குழந்தை தாக்கியது. வாசலில் நின்றிருந்தவர்கள் சப்தம் எழுப்பி சிறுத்தை விரட்டி குழந்தையை காப்பாற்றி உள்ளனர். குழந்தையின் முகம், உடலில் நககீறல்கள் ஏற்பட்டன.
உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், இரவ பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனச்சரகர்கள் அய்யனார், ரவி உட்பட பலர் விசாரணை நடத்தினர்.