/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதர் மண்டி கிடக்கும் சாலை வாகனங்கள் சென்றுவர சிரமம் புதர் மண்டி கிடக்கும் சாலை வாகனங்கள் சென்றுவர சிரமம்
புதர் மண்டி கிடக்கும் சாலை வாகனங்கள் சென்றுவர சிரமம்
புதர் மண்டி கிடக்கும் சாலை வாகனங்கள் சென்றுவர சிரமம்
புதர் மண்டி கிடக்கும் சாலை வாகனங்கள் சென்றுவர சிரமம்
ADDED : ஜூன் 05, 2025 11:38 PM

ஊட்டி, ; ஊட்டியில் இருந்து, தாவணெ கிராமத்திற்கு செல்லும் சாலையில், புதர்மண்டியுள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, தாவணெ செல்லும் சாலையில், கோழிப்பண்ணை ஜங்ஷன் பகுதியில், சாலையோரத்தில் புதர்மண்டி கிடப்பதால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இவ்வழியாக, தாவணெ, உல்லத்தி, மேலுார், காரப்பிள்ளு மற்றும் மல்லி கொரை உட்பட, பல்வேறு கிராமங்குக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்படாததால், எதிரில் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலையில், இடையூறு ஏற்படுகிறது. அத்துடன், கால விரயம் அதிகரிக்கிறது. எனவே, சம்பந்தட்ட நிர்வாகம், புதர்செடிகளை அப்புறப்படுத்தி, சீரான முறையில் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக, சாலையை விரிவுப்படுத்துவது மிக அவசியம்.