/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கழிப்பிடங்கள் முழுமையாக திறக்கப்படாததால் பயணிகள் அவதி கழிப்பிடங்கள் முழுமையாக திறக்கப்படாததால் பயணிகள் அவதி
கழிப்பிடங்கள் முழுமையாக திறக்கப்படாததால் பயணிகள் அவதி
கழிப்பிடங்கள் முழுமையாக திறக்கப்படாததால் பயணிகள் அவதி
கழிப்பிடங்கள் முழுமையாக திறக்கப்படாததால் பயணிகள் அவதி
ADDED : ஜூன் 05, 2025 11:36 PM
ஊட்டி:
ஊட்டி சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நாள்தோறும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. நகரப் பகுதியில் போதிய அளவு, கழிப்பிட வசதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக, பெண்கள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரப் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சில பகுதிகளில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும், தாவரவியல் பூங்கா அருகே, கழிப்பிடம் கட்டி முடிக்காமல் விடுபட்டுள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம், கழிப்பிடங்கள் கட்டும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.