/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வாய் திறக்காத கவுன்சிலர் வார்டு மக்கள் கடும் அதிருப்திவாய் திறக்காத கவுன்சிலர் வார்டு மக்கள் கடும் அதிருப்தி
வாய் திறக்காத கவுன்சிலர் வார்டு மக்கள் கடும் அதிருப்தி
வாய் திறக்காத கவுன்சிலர் வார்டு மக்கள் கடும் அதிருப்தி
வாய் திறக்காத கவுன்சிலர் வார்டு மக்கள் கடும் அதிருப்தி
ADDED : ஜன 30, 2024 11:06 PM
குன்னுார்;குன்னுார் நகராட்சியில், 24 கூட்டங்களில், வார்டு பிரச்னைகள் குறித்து, வாய் திறக்காத பெண் கவுன்சிலர், நேற்று கையெழுத்து இட்டு வெளியே சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. அதில், 21 வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் வேலுமணி. 'இவர், கடந்த 24 நகராட்சி கூட்டங்களில் இதுவரை வார்டு பிரச்னை குறித்து வாய் திறந்து எதுவும் பேசவில்லை,' என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்த நிலையில் சில கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர், கையெழுத்திட்டு சென்றார். இந்த சம்பவம் மற்ற கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, 21வது வார்டில் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி, ஊர் மக்கள் நகராட்சிக்கு வருகை தந்து மனு அளித்தனர். எனினும், இதுவரை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.