/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் சிக்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்! நீலகிரி போலீசாரிடம் வந்த 115 புகார்களில் 50க்கு தீர்வு'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் சிக்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்! நீலகிரி போலீசாரிடம் வந்த 115 புகார்களில் 50க்கு தீர்வு
'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் சிக்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்! நீலகிரி போலீசாரிடம் வந்த 115 புகார்களில் 50க்கு தீர்வு
'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் சிக்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்! நீலகிரி போலீசாரிடம் வந்த 115 புகார்களில் 50க்கு தீர்வு
'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் சிக்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்! நீலகிரி போலீசாரிடம் வந்த 115 புகார்களில் 50க்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 10:23 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், 'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் சிக்கி பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபகாலமாக, 'ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,' என, நம்ப வைக்கும் பல செயலிகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. அதில், 'திருமண செயலிகள், நெட் பேங்கிங் ரகசிய குறியீடு எண்ணை மாதம் ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும் என கூறுவது, ஆன்லைன் செயலிகள் வாயிலாக கடன் வழங்குவது, கூகுள் ரிவ்யூ வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., வரி, ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக கூறுவது, பகுதி நேர வேலை வாய்ப்பு,' போன்ற பல செயலிகள் வாயிலாக பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. அதில், பல செயலிகள் வாயிலாக பண மோசடியும் நடக்கிறது.
உஷாராக இருக்கணும் பொதுவாக, 'சைபர் கிரைம்' என்பது கணினி நெட்வொர்க் அல்லது நெட்வொர்க் சாதனத்தை உள்ளடக்கிய ஒரு குற்றச்செயலாகும். பெரும்பாலான சைபர் கிரைம்களை லாபம் ஈட்ட பயன்படுத்தினாலும், சில சைபர் கிரைம்கள் கணினிகள் அல்லது சாதனங்களுக்கு எதிராக நேரடியாக சேதப்படுத்த அல்லது செயலிழக்க செய்யப்படுகின்றன.
சட்டவிரோத தகவல், படங்கள் அல்லது பிற பொருட்களை பரப்ப கணினிகள் அல்லது நெட்வொர்க்களை பயன்படுத்துகின்றனர். இத்தகைய தகவல்களை தெரிவித்து, போன் கால் வந்தால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், மின்னஞ்சல், இணைய மோசடி, அடையாள மோசடி, அத்துடன் நிதி கணக்கு, கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டண அட்டை தகவல்களை திருடும் முயற்சிகள் உட்பட பல்வேறு வகையான லாபம் சார்ந்த குற்றச்செயல் மாவட்டம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன.
அதனால், ஏமாற்றப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்ல தயங்குவது அதிகரித்து வருகிறது. போலீசாரின் விழிப்புணர்வு பணிகளால், கடந்த இரு ஆண்டுகளாக பலரும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம் ஏமாற்றப்பட்டதாக, போலீசாரிடம் புகார் அளிக்க வருகின்றனர்.
இதுவரை வந்த 115 புகார்கள் நீலகிரியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடந்த இரண்டு ஆண்டில்,115 புகார்கள் பெறப்பட்டுள்ளன. புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு, 50 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 65 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்டு, 25 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரை, 3 கோடி ரூபாய் புகார்தாரர்களுக்கு திரும்ப கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீணா கூறுகையில்,''ஆன்லைன் சேவைகள் அதிகரித்துள்ள நிலையில், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இது போன்ற சைபர் கிரைம் சார்ந்த குற்றங்களில் சிக்காமல்,பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக மோசடியாக பணத்தை இழந்து விட்டால், உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்,1930 ஐ விரைவாக தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளையும் பிடிக்க முடியும். உங்களின் பணத்தையும் மீட்க முடியும்,'' என்றார்.