/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: குளிரான காலநிலையால் அவதிசுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: குளிரான காலநிலையால் அவதி
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: குளிரான காலநிலையால் அவதி
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: குளிரான காலநிலையால் அவதி
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: குளிரான காலநிலையால் அவதி
ADDED : ஜன 28, 2024 11:44 PM

குன்னூர்:தொடர் விடுமுறையை ஒட்டி குன்னூர் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
குடியரசு தின விடுமுறை, வார இறுதி நாட்கள் விடுமுறையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை களை கட்டியது.
குன்னூர் சிம்ஸ்பூங்கா வந்த சுற்றுலா பயணிகள் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர். லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
மலை ரயிலிலும் கூட்டம் அதிகரித்ததால், பல பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் வானம் மேக மூட்டம் காரணமாகவும் வெயில் இல்லாததாலும் . குளிர் காற்று வீசியதால் கடுங்குளிர் நிலவியது. மதியம் வரை வெயிலின் தாக்கம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் சிரமப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.